சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ஹவுரா எக்ஸ்பிரசில் 2வது நாளாக 36 கிலோ கஞ்சா பறிமுதல்: ரயில்வே போலீசார் அதிரடி

சென்னை: ஹவுரா எக்ஸ்பிரசில் இரண்டாவது நாளாக கஞ்சா கடத்திய 3 பேரை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.  அப்போது அந்த ரயிலில் வந்த பயணிகள் சென்றனர். அந்த ரயில்களில் வந்த 3 பேர் வெளியில் செல்லாமல் நடைமேடை 5ல் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்த ரயில்வே போலீசார் அவர்களை அழைத்து விசாரணை  செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாசனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் கொண்டு வந்த பேக்கை சோதனை செய்த போது அதில் 36 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து  ரயில்வே போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டிணத்தை சேர்ந்த பாண்டி பூர்ண சந்திரா (33), கம்பம், கேம்ப்ரோடு பகுதியை சேர்ந்த வனராஜ் (52), ஒரிசா, ஆனந்தகுரி பகுதியை சேர்ந்த துர்சன் (65) ஆகிய  மூன்று பேரையும் ரயில்வே போலீசார் கைது ெசய்து அவர்களிடம் இருந்து 36 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும், ஆந்திர மாநிலம் வழியாக வரும் ஹவுரா எக்ஸ்பிரசில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கஞ்சா பொட்டலங்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ஹவுரா எக்ஸ்பிரசில் அடிக்கடி கஞ்சா ெபாட்டலங்கள் கடத்தப்படுவதால்  சென்ட்ரல் ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வாங்கி வருகின்றனர் என்றும் ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: