புரட்டாசி முதல் சனிக்கிழமை திருப்பதி கோயிலில் 4 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் வார நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் ₹300 டிக்கெட், சர்வ தரிசனம், திவ்ய தரிசன டிக்கெட் மூலம் பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் தற்போது பிறந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை 76,344 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று அதிகாலை 5 மணி நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 6 அறைகள் நிரம்பின. இவர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரத்திலும், சர்வ தரிசனம், திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது.

Related Stories: