×

கணவனை தேடிச் சென்ற இந்திய பெண்ணுக்கு செயற்கை சுவாசம்: துபாயில் 6 மாதமாக பரிதாபம்

துபாய்:  துபாய்க்கு தனது கணவரைப் பார்க்க சென்ற இந்திய பெண் மூளை காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதமாக செயற்கை சுவாசத்தினால் உயிர் வாழ்ந்து வருகிறார்.கணவரால் கைவிடப்பட்ட லலிதா என்ற பெண், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்து சிறுசிறு வேலைகள் செய்து அதில் கிடைத்த வருமானத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்தார். தற்போது அங்குள்ள தையல்கடையில் அவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகள் நீத்து ஷாஜி பணிக்கரை சார்ஜாவில் பணியாற்றி வரும் ஜிதினுக்கு கடந்தாண்டு திருமணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து கடந்த ஜனவரி மாதம் கணவரைப் பார்க்க வந்த நீத்துவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக நீத்துவின் ஆரோக்கியமான மூளை செல்கள் தானாக செயல் இழந்து மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இதையடுத்து, மூளை காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அவரை அபுதாபியில் உள்ள ஷேக் கலிபா மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் கடந்த மார்ச் மாதம் முதல் செயற்கை கருவி மூலம் சுவாசித்து வருவதாக இந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags : Dubai Indian ,Dubai , Indian woman,looking, husband breathes, artificially,6 months in Dubai
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...