ஜி.எஸ்.டி வரி குறைப்பு தொழில்முனைவோர் வரவேற்பு

கோவை: மத்திய நிதி அமைச்சர் தலைமையில் கோவாவில் நேற்று முன்தினம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் தொழில்நிறுவனங்களுக்கான வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. அதில், வெட்கிரைண்டருக்கு விதிக்கப்படும் 12 சதவீத ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் தொழில்முனைவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 700 வெட்கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.

இந்த தொழிலை நம்பி சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். கோவையில் தயாரிக்கப்படும் வெட்கிரைண்டர்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு இலவச வெட்கிரைண்டர் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்ததால் கடந்த 2016ல் இருந்து நலிவில் இருந்த எங்கள் தொழில் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டு 28 சதவீத வரி விதிக்கப்பட்டதால் மோசமான நிலைக்கு சென்றது. பின்னர், பலரின் கோரிக்கையை ஏற்று 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் 5 சதவீதமாக உள்ளது. இந்த வரி குறைப்பு எங்களது தொழில் மேம்பட உதவிகரமாக இருக்கும். இவ்வாறு ராஜா கூறினார்.

Related Stories: