மேலும் சலுகைகள் நிதி அமைச்சர் ரெடி

புதுடெல்லி: பொருளாதார மந்த நிலையை தடுத்து வளர்ச்சிக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைத்தது. அதுபோன்று மேலும் சலுகை நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து சரிந்தது தொடர்பாக அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்கு உள்நாட்டு பிரச்னைகள் மட்டும் காரணம் அல்ல சர்வதேச பொருளாதார நிலையின் தாக்கமும் காரணம் என்று மத்திய அரசு காரணம் கூறியது.

இந்நிலையில், ஆட்டோமொபைல் தொழில் நெருக்கடியைத் தீர்க்க பல்வேறு ஊக்க சலுகைகளை அரசு அறிவித்தது. அதேபோல், ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது. இதனால், பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீளும் என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மேலும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசின் நடவடிக்கையால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதால் பங்குச்சந்தைகளில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது. முதலீடுகள் அதிகரித்து தொழில் துறை மேம்படும் என்றும் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் அரசின் சலுகை நடவடிக்கைகள் தொடரும் என்று தொழில் துறையில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: