கூடுதல் சிறப்பம்சங்களுடன் டொயோட்டா யாரிஸ்

மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்ட டொயோட்டா யாரிஸ் கார், தற்போது புதுப்பொலிவுடன் களம் இறங்கியுள்ளது. உட்புறத்திலும் சில மாற்றங்களுடன் இந்தகார் வர இருக்கிறது. லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லிவர் இடம்பெற்றுள்ளது. இந்த காரில், புதிய ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளைசப்போர்ட் செய்யும் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், எம்ஐடி திரையுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கெச்சர் கன்ட்ரோல், நேவிகேஷன் வசதிகள் இடம்பெற்றுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும்.இப்புதிய டொயோட்டா யாரிஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 106 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த கார், ஜே ஆப்ஷனல், ஜி, வி மற்றும் விஎக்ஸ் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. இந்த கார், சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த காரில், 7 ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக், இபிடியுடன்கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டிராக்க்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட அதிக பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த காரின், ஜே ஆப்ஷனல் என்ற மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட் ₹8.65 லட்சத்திலும், சிவிடி மாடல் ₹9.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் வேரியண்ட் விலை ₹60,000 வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், இரட்டை வண்ணக்கலவை மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படும் வி ஆப்ஷனல் வேரியண்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ₹11.97 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், சிவிடி மாடலுக்கு ₹13.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Related Stories: