×

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர்

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இப்புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். ஸ்டான்டர்டு வேரியண்ட்: ₹67,490 ஆரம்ப விலை கொண்ட இந்த ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் முன்சக்கரத்தில் 12 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 10 அங்குல ஸ்டீல் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன. அலாய் வேரியண்ட்: இதன் விலை ₹70,990. பேஸ் வேரியண்ட்டில் ஸ்டீல் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த வேரியண்ட்டில் கூடுதலாக அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. இதில், ஸ்டார்ட்- ஸ்டாப் மற்றும் முன்சக்கரத்திற்கான டிஸ்க் பிரேக் தேர்வு இல்லை. எல்இடி ஹெட்லைட், அனலாக் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளேவுடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சைடு ஸ்டான்டு போட்டிருந்தால் இன்ஜின் ஸ்டாரட் ஆவதை தவிர்க்கும் வசதிகள் உள்ளன.

டீலக்ஸ் வேரியண்ட்: இதன் விலை: ₹74,490. அனைத்து சிறப்பு வசதிகளும் பொருந்திய இந்த வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் - அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவை உள்ளன. இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மூலமாக நிகழ்நேர எரிபொருள் செலவு, இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும். இந்த வேரியண்ட்டில் கூடுதலாக ஐட்லிங் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம் மற்றும் முன்சக்கரத்திற்கான 190 மிமீ டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அலாய் வீல்களும் இடம்பெற்றுள்ளன.புதிய ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் இன்ஜின் கார்புரேட்டருக்கு பதிலாக பியூவல் இன்ஜெக்க்ஷன் சிஸ்டம் துணையுடன் இயங்குகிறது. இந்த மாடலானது அதிகபட்சமாக 8.1 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய மாடலைவிட செயல்திறன் குறைவுதான். ஆனால், குறைவான மாசு உமிழ்வையும், 13 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும் சாத்தியப்படுத்துகிறது. இப்புதிய ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரில் புதிய செல்ப் ஸ்டார்ட் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஏற்கப்படுகிறது. வரும், செம்டம்பர் 29ந் தேதி முதல் டெலிவிரி துவங்குகிறது.


Tags : Honda , New ,Honda Activa, 125 PS-6,Scooter
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...