பொறியியல் கல்லூரி பேட்மின்டன்: வள்ளியம்மை கல்லூரி சாம்பியன்

சென்னை: அண்ணா  பல்கலைக்கழக 4ம் மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான பால் பேட்மின்டன் போட்டி  வள்ளி யம்மை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு  பொறியியல் கல்லூரிகள் சார்பில் 100 மாணவர்கள் பங்கேற்றனர்.இதன்  முதல் அரை இறுதியில், எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி அணி,  ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி அணியை  35-21, 35-25 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. 2வது அரை இறுதியில், குரோம்பேட்டை எம்ஐடி அணி 35-23, 35-19 என்ற புள்ளிக்கணக்கில்  ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்ப கல்லூரி அணியை வீழ்த்தியது. இறுதிப்  போட்டியில்  வள்ளி யம்மை -  எம்ஐடி அணிகள் மோதின.

இதில் வள்ளியம்மை கல்லூரி 35-21, 35-30 என்ற புள்ளிக்கணக்கில் வென்று முதலிடத்தையும், எம்ஐடி 2ம் இடத்தையும் பெற்றன. முன்னதாக நடைபெற்ற 3வது, 4வது இடங்களுக்கான போட்டியில், ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி அணி 35 -25, 35-27 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்ப கல்லூரியை வீழ்த்தியது.  போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்  ம.முருகன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் கணபதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Related Stories: