×

ஓவர் த்ரோ...

தேசிய யு-14 கேரம்
இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தின் சார்பில் நடைபெற உள்ள தேசிய அளவிலான யு-14 கேரம் போட்டியில் பங்கேற்க மாவட்டவாரியாக மாணவ, மாணவிகள் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த மாணவிகளுக்காக, அம்பத்தூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்வு முகாமில் 54 பேர் பங்கேற்றனர். இதில்  சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பர்கத் நிஷா,  காவியா, காஸிமா மற்றும் அயனாவரம், கீழ்ப்பாக்கம் தனியார் பள்ளிகளில் படிக்கும் செம்மொழி தமிழ் எழில், ஷிவானி ஆகிய 5 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

பெண்கள் கிறித்துவ கல்லூரி சாம்பியன் சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான பி மண்டல மாணவிகள் கிரிக்கெட் போட்டி, பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை பெண்கள் கிறித்துவக் கல்லூரி முதலிடத்தையும், எத்திராஜ் பெண்கள் கல்லூரி 2வது இடத்தையும், காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி 3வது இடத்தையும் பிடித்தன. சென்னை கல்லூரிகள் வெற்றி தமிழக கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் ஈரோட்டில் நடைபெற்றது. வாலிபால் இறுதிப் போட்டியில் அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி-பனிமலர் பொறியியல் கல்லூரிகள் மோதின. இதில் வைஷ்ணவா கல்லூரி 2-1 என்ற செட்களில் வென்று முதலிடத்தையும், பனிமலர் கல்லூரி 2வது இடத்தையும் பிடித்தன.

சாம்பியன் சென்னை
மாநில அளவிலான யு8, யு10, யு12, யு14 டென்னிஸ் போட்டி சென்னை கொளத்தூரில் நடைபெற்றது. இதில் சென்னை உட்பட பல்வேறு வட்டங்களை சேர்ந்த 156 சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர். ஒற்றையர் போட்டியில் முறையே  சென்னையை சேர்ந்த ஹீரா, ரோனி, தியா, யஷ்வந்த், கல்யாண், தேவ, கண்ணன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். சர்வதேச செஸ் இன்று தொடக்கம்காஞ்சி சதுரங்க அகாடமி சார்பில் சர்வதேச தரப் புள்ளி களுக்கான செஸ் போட்டி, இன்று முதல் வரும் 27ம் தேதி வரை நடைபெறும். தாம்பரம் மதனபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் இந்தப் போட்டி மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெறும். தொடர்ந்து 2ம் கட்ட போட்டி வரும் 28ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை 8 சுற்றுகளாக நடைபெற உள்ளது.

Tags : Over Throw ...
× RELATED குடியாத்தம் அடுத்த பனந்தோப்பு...