×

வேலூர் மாவட்டத்தில் மலைகளில் கனிமங்களின் மாதிரிகளை சேகரித்து பட்டியலிடும் பணி தீவிரம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் கனிமங்களின் மாதிரிகளை சேகரித்து பட்டியலிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கனிம வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் 160 கல்குவாரிகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் 60 குவாரிகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது. மற்ற குவாரிகள் பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கிறது. செயல்பாட்டில் உள்ள கல்குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா? என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குவாரிகளில் இருந்து எவ்வளவு கற்கள் வெட்டி எடுத்து செல்லப்படுகிறது என்பதை ஆவணங்களில் முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் அனுமதி பெறப்பட்ட வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்களை குவாரிகளில் பயன்படுத்தக்கூடாது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் புதிதாக 40 கல்குவாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த குவாரிகள் டெண்டர் விடுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

அதேபோல், வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் முக்கிய தனிமங்களின் மாதிரிகளை சேகரித்து பட்டியலிட்டு வருகிறோம். அரக்கோணம் மோசூரில் கிடைக்கும் நிலக்கரி, வாலாஜா கொடக்கல் பகுதியில் கிடைக்கும் கருப்பு கிரானைட், பேரணாம்பட்டு பகுதியில் கிடைக்கும் கிரானைட் ஆகியவற்றின் கிரேடுக்கு ஏற்றவாறு தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தங்க நிறத்தில் ஜொலிக்கும் டாமின் எக்போலியடேட் வகை கற்களும் கிரேடு வாரியாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஆறுகளில் கிடைக்கும் மணல்களும் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : mountains ,Model ,Vellore ,Vellore district , Vellore, Model of Minerals
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...