பில்லூர் கூட்டு குடிநீர் திட்ட அரசாணைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பில்லூர்-3 வது குடிநீர் திட்டத்தை துவக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டது. இதற்கு மத்திய-மாநில அரசுகளின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் இத்திட்டத்தை துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின்கீழ், இக்குடிநீர் திட்டத்தை துவங்க, மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடான ரூ.1,018 கோடியில், ரூ.600 கோடி நிதியை மத்திய அரசு வழங்கும் என்றும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: