×

விவேகம் பட உரிமை - தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிய உத்தரவு

சென்னை: அஜித் நடித்த விவேகம் பட வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. மலேசிய நிறுவனம் அளித்த புகாரில் சத்யஜோதி தியாகராஜன் மீது வழக்குப்பதிய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளியீடு உரிமையை மலேசியா நிறுவனத்திற்கு வழங்கிய நிலையில் வேறு நிறுவனத்திற்கும் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. மலேசியாவை சேர்ந்த டிஆர்எஸ் பட நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : producer , vivegam, Case
× RELATED ஊரடங்கு நேரத்தில் இரவில் 2வது திருமணம் செய்த தயாரிப்பாளர்