கந்தர்வகோட்டையில் சிவன் கோயிலுக்கு செல்லும் வழியில் ஆபத்தான பள்ளம்

கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டையில் ஆபத்சகாஈஸ்வரர் உடனுறை அமராவதி அம்மன் சிவன் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய கோரிக்கை எழுந்துள்ளது. கந்தர்வகோட்டையில் ஆபத்சகாஈஸ்வரர் உடனுறை அமராவதி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் சங்கூரணி குளம் உள்ளது. இக்குளத்தின் ஓரத்தில் ஏற்கனவே பெரிய கிணறு ஒன்று இருந்துள்ளது. கிணற்றின் சுற்றி இருந்த கற்களை யாரோ பெயர்த்து எடுத்து சென்று விட்டதால் தற்போது பெரிய பள்ளமாக ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இதின் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் சிறிய குழந்தைகள் அதிகளவில் உள்ளனர். கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு ஏற்ப ஆபத்தான முறையில் பெரிய பள்ளம் உள்ளது. சிவன் கோயிலுக்கு வந்து செல்வோர் மற்றும் திருமணம், காதுகுத்துதல் நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது அதிக மக்கள் நடந்தும் பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். அப்படி வருவோர் இந்த பள்ளத்தில் தவறி விழும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இப்பள்ளத்தை மூடவேண்டும். இல்லையெனில் இதனை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Shiva Temple ,Gandharvagot , kantarvakottai ,Sivan Temple ,Dangerous groove
× RELATED பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்தபின்...