×

நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: திருவள்ளூர், விழுப்புரம், பெரம்பலூர்,சிவகங்கை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு தீப கற்ப பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : districts ,Chennai Meteorological Department Nagai ,Thiruvarur ,Nagai ,Chennai Meteorological Department , Meteorological Center, Kanchipuram, Villupuram, Heavy Rain, Atmosphere, Overlay Cycle
× RELATED டெல்டா மாவட்டங்களில் சூறாவளி...