விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி : ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்திப்பு மேற்கொண்டார். விக்கிரவாண்டி, நாங்குநேரியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பது குறித்து அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று கூறினார். மேலும் அவர் கூறியது பின்வருமாறு :

*விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும்.

*திமுக சார்பில் விக்கிரவாண்டியில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை மறுநாள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்

*விருப்ப மனு பெறப்பட்டதன் மறுநாள் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

Related Stories: