தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : சுனில் அரோரா

டெல்லி : தேர்தல் பிரச்சாரங்களின்போது அரசியல் காட்சிகள் பிளாஸ்டிக்கை தவிர்க்குமாறு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் பேசியது பின்வருமாறு :

*ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 2-ல் முடிவடைகிறது

*மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 9-ல் முடிவடைகிறது

*இந்த தேதிகளுக்கு முன்னால், ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்

*மகாராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஹரியானாவில் 90 தொகுதிகள் உள்ளன

*மகாராஷ்டிரா, ஹரியானாவில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் விரிவான ஆய்வுகளை செய்துள்ளது.

*வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன

*தேர்தல் நடத்துவது தொடர்பாக இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது

*ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1.82 கோடி

*மகாராஷ்டிராவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8.94 கோடி

Related Stories: