போலி சான்றிதழ் கொடுத்து மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரியாஸ் என்ற மாணவர் பிடிபட்டார்

மதுரை: போலி சான்றிதழ் கொடுத்து மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரியாஸ் என்ற மாணவர் பிடிபட்டார். தற்போது இந்த மாணவர் தல்லாக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த விக்ரம் சிங் என்பவர் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததாக மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஒரு போலி இடஒதுக்கீடு கடிதம் வழங்க ரூ.60 லட்சம் விலை நிர்ணயம் செய்து வந்துள்ளனர். இந்த மோசடி கும்பல் டெல்லியில் இருந்து விமானத்தில் வந்து போலி சான்றிதழ் கொடுத்துவிட்டு சென்றுள்ளதாக வாக்குமூலத்தில் மாணவர் தெரிவித்துள்ளார்.

Tags : Riyas ,Madurai Medical College , Dummy Certificate, Madurai Medical College, Student, Riaz
× RELATED இருவருக்கு வெற்றி சான்றிதழ் ரத்து செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு உள்ளதா?