கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக உச்சநீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் அடங்கிய நிரந்தர அரசியல் சாசன அமர்வு நியமனம்!

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் அடங்கிய நிரந்தர அரசியல் சாசன அமர்வு நியமனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் நிரந்தரமான அரசியல் சாசன அமர்வு நியமனம் செய்யப்பட்டுள்ளது இதுவே முறையாகும். வரும் அக்டோபர் 1ம் தேதியிலிருந்து இந்த புதிய அமர்வு வழக்குகளை விசாரணை செய்யும் என தெரிவிவக்கப்பட்டுள்ளது. தற்போது, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். சுமார் 60,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 37 முக்கிய வழக்குகள் அரசிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக 4 புதிய நீதிபதிகள் வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளனர். இதனால், உச்சநீதிமன்றத்திற்கு முழு பலம் கிடைக்கும். நிரந்தரமான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுடன் 3 நீதிபதிகள் கொண்ட 5 அமர்வுகள் செயல்படும்.

Advertising
Advertising

20 முதல் 25 நீதிபதிகள் வரை முக்கிய அரசியல் சட்டம் தொடர்பான முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நிலையில், 7 நீதிபதிகள் கொண்டு இரு அமர்வுகளும் இயங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை தனி நீதிபதி அமர்வு விரைவில் விசாரிக்க இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் அதிக அளவில் வழக்குகள் தேங்குவதைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக உச்சநீதிமன்ற விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை தனி நீதிபதி அமர்வு விசாரிக்கும்.உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுவரை எந்த வழக்காக இருந்தாலும் குறைந்தபட்சம் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதுதான் வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: