காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி காதலன் இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்,..உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது

விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ்குமார் (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த 3 வாலிபர்கள் சென்னையில் கடைகளில் வேலை பார்த்து வந்தனர். லீவில் ஊருக்கு வருபவர்கள் நண்பருடன் ஜாலியாக பொழுதை கழித்துவிட்டு சென்னை திரும்புவர். இந்நிலையில் கணேஷ்குமார் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஓராண்டாக காதலித்து வந்தனர். இதையறிந்த பெற்றோர் மகளை கண்டித்ததுடன், வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்து விட்டனர். இதையறிந்த நண்பர் உன் காதல்தான் பாதியில் முறிந்து விட்டது. நான் அந்த பெண்ணை காதலிக்கிறேன் என்றார். இதைக்கேட்ட கணேஷ்குமார் அவள் உனக்கு வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார். ஆனாலும் அவர்களது பழக்கம் தொடர்ந்தது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதையடுத்து இருவரும் அடிக்கடி போனிலும் தனிமையிலும் சந்தித்து பேசி வந்துள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த பெண்ணை பைக்கில் விளாத்திகுளம்-வேம்பார் ரோட்டில் உள்ள ஒரு காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து கணேஷ்குமாருக்கும் நண்பர்களுக்கும் ெதரிவித்து அவர்களையும் அங்கு வரவழைத்துள்ளார்.பின்னர் அப்பெண்ணை பலவந்திபடுத்தியதில் பெண் மயங்கினார். இதைப்பார்த்து 4 பேரும் பயந்தனர். இவர்களை அங்கு பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து விளாத்திகுளம் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.

மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அங்கு சென்று மயங்கி கிடந்த பெண்ணை மீட்டனர். 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related Stories: