தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. 18-ம் தேதி பெய்த கனமழையில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 22 செ.மீ. மழை பதிவாகியது. திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னை அருகே இருக்கிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

24 மற்றும் 25-ம் தேதிகளில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் உடையளிபட்டி 7 செ.மீ., தஞ்சாவூர் 6 செ.மீ., திருமயம், கமுதி, வல்லம், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, ஆத்தூர், வலங்கைமான், சிவகங்கை, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, தேவகோட்டை, காரைக்குடியில் தலா 5 செ.மீ., கீரனூர், சோழவரம், பெருங்கலூர், தஞ்சாவூர், கும்பகோணத்தில் தலா 4 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை  பதிவாகியுள்ளது.

Related Stories: