இந்த வார பங்குச்சந்தையில் 4.37 லட்சம் கோடி இழந்தபின் 6.82 லட்சம் கோடி லாபம்

மும்பை:  பங்குச்சந்தைகளில் திடீர் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு 1.65 லட்சம் கோடிக்கு மேல் நேற்று முன்தினம் நஷ்டம் ஏற்பட்டது. இதுபோல் இந்த வாரம் முதல் இரண்டு நாட்களில் ஏற்பட்ட சரிவால் 2.72 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிறுவனங்களுக்கு அதிரடி வரிச்சலுகை மற்றும் வரி குறைப்புகளை அறிவித்த உடனேயே பங்குகள் மதிப்பு ₹2 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்தது. வர்த்தக இடையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் சென்றது. மாலை வர்த்தக முடிவில், முந்தைய நாளை விட 1921.15 புள்ளிகள் அதிகரித்தது.

இதனால் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 569.40 புள்ளிகள் அதிகரித்து, 11,274.20 புள்ளிகளாக இருந்தது. இதற்கு முன்பு 2009ம் ஆண்டு மே 18ம் தேதி சென்செக்ஸ் ஒரே நாளில் 2,111 புள்ளிகளும், நிப்டி 713 புள்ளிகளும் அதிகரித்ததே உச்சபட்ச அளவாக இருந்தது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு நேற்று 6,82,938.6 கோடி அதிகரித்து 1,45,37,378.01 கோடியாக உயர்ந்தது. இந்த வார பங்குச்சந்தையில் 4.37 லட்சம் கோடி நஷ்டத்துக்கு பிறகு கடைசி நாள் வர்த்தகம் லாபத்தில் முடிந்தது.

Related Stories: