×

புள்ளி விவரங்களுக்கு ஏற்ப வட்டியை குறைக்க முடிவு : ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்

மும்பை: கடன் வட்டி குறைப்பு, இனி வரும் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பின்னடைவாக உள்ளது பற்றி எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர், நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு பட்ஜெட் செலவினங்களை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். இதுபோல் குறுகிய கால கடன் வட்டி குறைப்புக்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.  இந்நிலையில், வட்டி குறைப்பு பற்றி நேற்று அவர் கூறுகையில், வட்டி குறைப்பு தொடர்பான கொகை முடிவுகள், இனி வரக்கூடிய வளர்ச்சி தொடர்பான புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்.

வளர்ந்த நாடுகளில் பண வீக்கம் ஏறக்குறைய பூஜ்ய அளவிலேயே உள்ளது. இதனால் தான் அங்கு வட்டிகளும் மிக மிக குறைவான குள்ளன. ஆனால், நமது பண வீக்க விகித இலக்கு 4 சதவீதமாக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டே முடிவு செய்ய வேண்டும். எனவே, வளர்ந்த நாடுகள் அளவுக்கு நம்மால் வட்டிகை குறைக்க முடியாது. ரிசர்வ் வங்கி தன்னாட்சி அதிகாரத்துடன்தான் செயல்படுகிறது. கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு முன்பு மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். மற்றபடி, பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிக்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம்தான். இதை பேசி தீர்க்க வேண்டும் என்றார்.

Tags : RBI ,governor , Decision to cut interest , RBI figures, RBI governor
× RELATED கொரோனா ஊரடங்கில் தலைதூக்கும் கந்து...