பழுதடைந்த பந்தயக் கார் கவுரவ் கில்லுக்கு பின்னடைவு

துருக்கியில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் ஜேகே டயர்ஸ் ரேசிங் அணி சார்பில் இந்திய வீரர் கவுரவ் கில் பங்கேற்றார். தொடக்க சுற்றுகளில் அபாரமாக செயல்பட்ட கில் முன்னிலை வகித்த நிலையில், 8வது சுற்றின் போது அவர் கார் பழுதடைந்தது. நகர்த்தக் கூட முடியாமல் சிரமப்பட்டார். அதனை சரி செய்து மீண்டும் களத்திற்குள் நுழைந்ததும் காரின் டயர் பஞ்சரானது. இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்னைகளால் அவரால் பந்தய தூரத்தை நிறைவு செய்ய முடியவில்லை. எனினும், கடுமையான சவாலை சமாளித்து கவுரவ் மீண்டும் போட்டிக்குள் நுழைந்ததை சக வீரர்கள்  அனைவரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: