உலக கோப்பை ரக்பி நேரடி ஒளிபரப்பு

உலக கோப்பை ரக்பி போட்டித் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் கனடா, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இத்தாலி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன. தலா 5 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 48 போட்டிகள் 12 இடங்களில் நடக்கின்றன. இறுதிப் போட்டி நவ. 2ம் தேதி நடைபெறும். உலக கோப்பை ரக்பி போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் பெற்றுள்ளது. சோனி டென் 2 சேனலில் பார்த்து ரசிக்கலாம்.

Tags : World Cup ,World Cup Rugby , World Cup, Rugby broadcast live
× RELATED இளைஞர் உலக கோப்பையில் அபாரம் ஜப்பானை நசுக்கியது இந்திய அணி