டிஎன்சிஏ தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டிஎன்சிஏ) தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிசிசிஐ-ன் புதிய சட்ட விதிமுறைகளை ஏற்காமல் இருந்த காரணத்தால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் டிஎன்சிஏ சார்பில் தேர்தலை நடத்த அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, டிஎன்சிஏ தேர்தலை நடத்த நேற்று அனுமதி அளித்தது.

Advertising
Advertising

மேலும் உறுப்பினர், நிர்வாகி தகுதிநீக்கம் என்பது கிரிக்கெட் நிர்வாக குழு வகுத்த புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தேர்தல் முடிவுகள் அனைத்தும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் இறுதி முடிவுக்கு உட்பட்டதாகும்.

Related Stories: