×

சீனாவின் பலத்தால் தனிமையாகிறது தைவான் : ஒரே வாரத்தில் 2 கூட்டு நாடுகள் விலகல்

தைபே: சீனாவின் அதிகார பலத்தால், தைவானுடன் தூதரக உறவை மேற்கொண்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. தற்போது, 2 நாடுகள் ஒரே வாரத்தில் விலகி இருக்கின்றன. சீனாவில் கடந்த 1949ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும், தைவானின் நிலப்பரப்பு, சீனாவுக்கு சொந்தமானது என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக, தைவானை தனி நாடாக ஒரு சில நாடுகள் மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளன. தைவானில் கடந்த 2016ல் அதிபராக சாய் இங்க் வென் பதவியேற்ற போது, சீனாவுடன் ஒன்றிணைய அந்நாட்டு அதிபர் ஜின்பிங் வேண்டுகோள் விடுத்தார். இதனை சாய் நிராகரித்ததால், தூதரக ரீதியாக தைவானை தனிமைப்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. பொருளாதார ரீதியாக பலமிக்க சீனா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி தைவானை தனிமைப்படுத்தி, அதன் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய வைக்கிறது.

அதன்அடிப்படையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தைவானுடனான உறவை துண்டிப்பதாக பசிபிக் நாடுகளில் ஒன்றான சாலமன் தீவு அறிவித்த நிலையில் நேற்று மற்றொரு பசிபிக் நாடான கிரிபடியும் விலகி இருக்கிறது. கிரிபடியில் முதலீடுகள் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, தனது நட்பு நாட்டை விலகச் செய்து விட்டதாக தைவானின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வு அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுவரை 7 நாடுகள் தைவானை விட்டு பிரிந்துள்ளன. இதனால் தைவானுடன் தூதரக உறவை வைத்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 15 ஆக குறைந்துள்ளது.

Tags : Taiwan ,China , Taiwan isolated, China's strength
× RELATED தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்;...