×

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி 5 பேர் காயம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகமாகி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதிபர் மாளிகையில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் இச்சம்பவம் நடந்தது.

சாலையில் நடந்து சென்றவர்கள் மீது அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதை பார்த்து மக்கள் பீதியில் அலறியடித்து ஓடினர். இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் காயமடைந்தனர்.  துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தப்பிச் சென்று விட்டார். அவரை பிடிக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Mystery shooter ,White House ,United States ,Lawmakers , On Gun Control, US Lawmakers,Wait for White House
× RELATED அமெரிக்காவில் முன்னதாகவே ஊரடங்கை...