அபிநந்தன் விடுதலை தேசிய தலைமைக்கு கிடைத்த கவுரவம் : விமானப்படை தளபதி தனோவா பேச்சு

மும்பை: ‘‘ விமானி அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டது இந்திய அரசுக்கு கிடைத்த கவுரவம்,’’ என விமானப்படை தளபதி தனோவா தெரிவித்தார். இந்த மாத இறுதியில் ஓய்வு பெற உள்ள இந்திய விமானப்படை தளபதி பிஎஸ். தனோவா நேற்று மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது: விமானப்படை அதிகாரி அபிநந்தனை எனக்கு சிறுவயதிலேயே தெரியும். பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரின்போது விமானப்படை கமாண்டர் அஜய் அகுஜாவை நாம் இழந்து விட்டோம். அவர் விமானத்தில் இருந்து பாகிஸ்தான் பகுதியில் குதித்தபோது அங்கிருந்த ராணுவம் அவரை சுட்டுக் கொன்றது.

Advertising
Advertising

அதேபோல், கடந்த பிப்ரவரியில் நடந்த பாகிஸ்தான் உடனான மோதலின் போது நமது விமானப்படை விமானி அபிநந்தன் சென்ற விமானத்தை பாகிஸ்தான் தாக்கியதால் அவர் கீழே விழுந்து உயிர் தப்பினார். அப்போது, அபிநந்தனின் தந்தையிடம் நான், ‘கார்கில் போரின்போது அஜய் அகுஜாவை நாம் இழந்து விட்டோம் ஆனால் அபிநந்தன் நிச்சயம் நாடு திரும்புவார்,’ என உறுதி அளித்தேன். மார்ச் 1ம் ேததி அவர் மீட்கப்பட்டார். குறுகிய காலத்தில் நாம் அபிநந்தனை மீட்டது தேசிய தலைமைக்கு கிடைத்த கவுரவம். அவர் உடலளவில் பணியாற்ற தகுதி பெற்று விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: