உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை தனி நீதிபதி அமர்வில் ஜாமீன் மேல்முறையீடு : வழக்கு தேக்கத்தை தடுக்க விதிமுறை மாற்றம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன், முன்ஜாமீன் மேல்முறையீடு மனுக்களை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பது வழக்கம். இதில் முதல் முறையாக தற்போது மாற்றம் கொண்டு  வரப்பட்டுள்ளது. 7 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும் குற்ற வழக்குகளில் தனி நீதிபதியே ஜாமீன், முன்ஜாமீன் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேங்கி கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக உச்ச நீதிமன்ற விதிகள் 2013ல் நிறுத்தம் செய்ப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கிரிமினல் சட்டப்பிரிவு 437, 438, 439 ஆகியவற்றின் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்களை தனி நீதிபதி விசாரிக்கலாம். மேலும், பிரிவு 406ன் கீழ் கிரிமினல் வழக்குகளை இடமாற்றம் செய்யக்கோரும் மனுக்களையும் தனி நீதிபதி விசாரிப்பார். இந்த அமர்வுக்கான நீதிபதியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியமிப்பார்.

Related Stories: