நவராத்திரியை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் கொலு

சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு,  வடபழனி முருகன் கோயிலில் மிகப்பெரிய அளவில் பொம்மை கொலு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களும் இந்த கொலுவுக்கான பொம்மைகளை கொடுக்கலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நவராத்திரி விழா வரும் 28 தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து கோயில்கள், வீடுகளில் ெபாம்மை கொலு வைத்து பக்தர்கள் கொண்டாடுவார்கள். அதன்படி, வடபழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ‘சக்தி கொலு’ என்ற பெயரில் கோயில் வளாகத்தில் செப்டம்பர் 28ம் தேதி தொடங்கி அக்டோபர் 8ம் தேதி வரை பொம்மை கொலு வைக்கப்படுகிறது. இதில், பக்தர்கள் கொடுக்கும் பொம்மைகளையும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு அளவுக்கு மேல் கொலுவில் பொம்மைகளை வைக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் பக்தர்கள் முன்கூட்டியே பொம்மைகளை நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும். கொலு விழா நடைபெறும் 9 நாட்களும் பரதநாட்டியம், பக்தி ெசாற்பொழிவு, நடக்கிறது.  மேலும், ஒருநாள் லட்சார்ச்சனை, சரஸ்வதி பூஜை நாளில் பள்ளியில் சேர்க்கப்பட உள்ள குழந்தைகளுக்கு வித்யாரம்பம், வழிபாடு கோலாகலமாக நடக்க உள்ளது. நவராத்திரி நாட்களில் அம்பாளுக்கு 10 விதமான அலங்காரம் செய்யப்படும். என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: