பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை - தாம்பரம் இடையே ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம், தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது, என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரையில் இருந்து நாளை (22ம் தேதி) காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2, 2.30 ஆகிய நேரங்களில் தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், தாம்பரத்தில் இருந்து காலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35, 12, 12.15, 12.45, 1,30, 1.45, 2.15, 2.30, 3, 3.10 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

Advertising
Advertising

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, அரக்கோணம், காஞ்சிபுரம், திருமால்பூர் இடையே நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 1.50 மணி வரை இயக்கப்படும் 15 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு ரயில்கள் இயக்கம்:செங்கல்பட்டில் இருந்து நாளை காலை 10.55, 11.30, 12.20, 1, 1.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரைக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு சென்னை கடற்கரைக்கும், திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கும், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11.10, 11.45, 12.25, 1.35, 2, 2.35 மணிக்கும், சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.30 மணிக்கு தாம்பரத்திற்கும், சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.55 மணிக்கு அரக்கோணத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.   இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி வழித்தடம் சென்னை கடற்கரையில்

இருந்து நாளை (22ம் தேதி)

 காலை 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 9.50, 10, 10.20, 10.40, 11, 11.20, 11.40, 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படும்.

அதேப்போல், வேளச்சேரியில் இருந்து காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50, 1.10, 1.30 மற்றும் 1.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2.10 மணி முதல் வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே ரயில்கள் இயக்கப்படும்.

Related Stories: