×

5.20 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக தூய பேட்ரிக் கல்வி நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை: சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம், காந்தி நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் 2 சென்ட் நிலம் உள்ளது. இதில், 5 ஏக்கர் 20 சென்ட் நிலத்தை தூய பேட்ரிக் கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சியை எதிர் மனுதாரராக சேர்க்காமல் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பை வைத்துக்கொண்டு, அந்த இடத்தை மாநகராட்சி கைப்பற்ற முடியாதபடி இந்நிறுவனம் தடுத்து வைத்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தால் ஜூலை 15ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில்,  மாநகராட்சியை எதிர் மனுதாரராக சேர்க்காமல் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டதால், மேற்படி நிலத்தை உரிய விதிமுறைகளின்படி  சென்னை மாநகராட்சி மீட்கலாம், என்று உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, ஆகஸ்ட் 10ம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலர்களால்  தூய பேட்ரிக் கல்வி நிறுவனத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து 5  ஏக்கர் 20 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதனை எதிர்த்து தூய பேட்ரிக் கல்வி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையின் ஆரம்ப நிலையிலேயே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் தூய பேட்ரிக் கல்வி நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 5 ஏக்கர் 20 சென்ட்  நிலம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags : Pure Patrick Education Institute , Pure Patrick Education Institute, dismissing case , 5.20 acres ,land encroachment
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...