வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்து பட்டதாரிகளிடம் பல லட்சம் மோசடி : கம்பெனி மேலாளர் உட்பட 4 பேர் கைது

சென்னை:  கோவையை தலைமையிடமாக கொண்டு ‘ட்ரான்ஸ் இந்தியா பிரவேட்  லிமிடெட்’ என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை சென்னை எம்எம்டிஏ பேருந்து நிலையம் அருகே உள்ளது. இதன் உரிமையாளர் கோவையை ேசர்ந்த மோகன்ராஜ். 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம், என்று இந்நிறுவனம் சார்பில் விளம்பரம் செய்துள்ளனர். இதை பார்த்து வேலையில்லாத பட்டதாரிகள் பலர் தொடர்பு கொண்டுள்ளனர்.  அப்போது, நிறுவனத்தின் மேலாளர் பாண்டியன் (29) என்பவர், ‘எங்கள் நிறுவனத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்பதால் ரூ.7,500 செலுத்த வேண்டும். கட்டிய பணத்திற்கு நாங்கள் கொடுக்கும் பொருட்களை விற்பனை செய்து வேண்டும். அப்படி பொருட்கள் விற்பனை ெசய்வதோடு, எங்கள் நிறுவனத்திற்கு உறுப்பினர்களை சேர்க்க ேவண்டும். அப்படி சேர்த்தால் நீங்கள் கட்டிய ரூ.7,500 பணத்தை மீண்டும் உங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி அந்த நிறுவனத்தில் பட்டதாரி வாலிபர்கள் 50 பேர் ரூ.7,500 பணம் கட்டி நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அவர்கள் கொடுத்த பொருட்களையும் விற்பனை செய்தும், உறுப்பினர்களையும் சேர்த்து உள்ளனர். ஆனால் சொன்னப்படி யாருக்கும்கட்டிய பணம் ரூ.7,500 வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பட்டதாரி வாலிகர்கள் 30க்கும் மேற்பட்டோர் கடந்த புதன்கிழமை எம்எம்டிஏவில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பிறகு பாதிக்கப்பட்ட பட்டதாரி தினேஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் படி சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், உரிய அங்கீகாரம் இல்லாமல் நிறுவனம் நடத்தி, போலி விளம்பரம் செய்து பட்டதாரிகளிடம் பணம் பறித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து நிறுவனத்தின் மேலாளர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டியன் (29), ஊழியர்கள் திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியை ேசர்ந்த ராஜா (24), ராஜகுமார் (21) மற்றும் சேலம் பல்லப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜ்கமல் (29) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் மோகன் ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

கொள்ளையர்கள் சுற்றிவளைப்பு

சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியும் பலர், தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர். இவர்களின் அறைகளில் வைக்கப்படும் லேப்டாப், செல்போன், பணம் மற்றும் பொருட்கள் சமீப காலமாக திருடு போனது. இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளை நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பெற்று விசாரித்தனர். அதில், சம்மந்தப்பட்ட கொள்ளையர்கள் கிண்டியில் உள்ள லாட்ஜில் தங்கியிருப்பது தெரிந்தது. அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.  விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம், பேராணாமபட்டு தாலுகா, நய்யம்பட்டி அருகேயுள்ள சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் (22), ராமு (22), கார்த்திக் (26) மற்றும் 18 வயது வாலிபர் என்பதும், இவர்கள் லாட்ஜில் அறை எடுத்து தங்கி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ₹5 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: