துபாயில் இருந்து கடத்திய ஊக்க மருந்துகள் பறிமுதல்

மீனம்பாக்கம்: துபாயிலிருந்து இலங்கை வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை சென்னை வந்தது. அதில் வந்த மதுரையை சேர்ந்த முருகன் (36), முகமது அலி (37), திருச்சியை சேர்ந்த ஹரிகரன் (31) ஆகியோரின் பெட்டிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, 1,623 மருந்து பாட்டில்கள் இருப்பது தெரிந்தது.

விசாரணையில், அவை உடலை  மெருகூட்ட பயன்படுத்தும் மருந்துகள் என்பதும், இதை பயன்படுத்தினால் மாரடைப்பு, நரப்பு தளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால் மத்திய அரசு இதை தடை செய்திருப்பதும் தெரிந்தது. இதனால், அந்த மருந்துகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 33 லட்சம். மேலும் அவர்களிடம் இருந்து 54 வெளிநாட்டு சிகரெட் பண்டல்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அந்த மூவரையும் கைது செய்து, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா?, இதை யாருக்காக கடத்தி வந்தனர்? என விசாரித்து வருகின்றனர்.Tags : Dubai , Confiscation of smuggled drugs, Dubai
× RELATED போதைப்பொருள் விற்ற தம்பதி கைது