2 மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை தொடக்கம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவைகளை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஷேர் டாக்சி சேவையை 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், ஷேர் ஆட்டோ சேவையை 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் மாதம்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், கடந்த மாதம் 5ம் தேதி சென்ட்ரல், நந்தனம் உள்ளிட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவையை நிர்வாகம் தொடங்கியது. இந்த சேவையில் 15 நாளில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை மற்றும் விமானநிலையம் ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங்களில் நேற்று முதல் இந்த சேவை கூடுதலாக தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிலையங்களில் இருந்து 6 முதல் 8 கி.மீட்டர் தூரம் வரை இந்த சேவை செயல்பட உள்ளது. இதற்கு 10 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயண அட்டை மற்றும் மொபைல் ஆப் மூலம் வாகன கட்டணத்தை செலுத்தலாம்.

Related Stories: