சென்னை மாநகர காவல் துறை சார்பில் தீர்க்கப்படாத வழக்குகளுக்கு இன்று சிறப்பு குறைதீர் முகாம் : மண்டலம் வாரியாக நடக்கிறது

சென்னை:  சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 4 மண்டலங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி இன்று சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது. கூடுதல் கமிஷனர்கள் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள் தலைமையில் நடைபெறும் சிறப்பு குறைதீர் முகாமில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்ெபக்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

Advertising
Advertising

இந்த முகாம், வடக்கு மண்டலம் வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் இன்று காலை 11 மணிக்கு சமுதாய கூடத்தில் இணை கமிஷனர்  கபில் குமார் சராட்கர் தலைமையிலும், மேற்கு மண்டலம் அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் திருமுல்லைவாயல் சி.டி.எச். சாலையில் உள்ள மங்களம் திருமண மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு இணை கமிஷனர் விஜயகுமாரி தலைமையிலும், தெற்கு மண்டலம் பரங்கிமலை மாவட்டத்தில் பரங்கிமலை  ஆயுதப்படை மைதானத்தில் காலை 11 மணிக்கு இணை கமிஷனர் மகேஸ்வரி  தலைமையிலும், கிழக்கு மண்டலம் திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியில் காலை 11 மணிக்கு இணை கமிஷனர் சுதாகர் தலைமையிலும் நடக்கிறது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தீர்வு கிடைக்காத பொதுமக்கள் மட்டும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

Related Stories: