கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்காத 3 இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை : கமிஷனர் அதிரடி

சென்னை: சென்னையில் கஞ்சா, குட்கா விற்பனையை  தடுக்காத 3 இன்ஸ்பெக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணாநகர், அம்பத்தூர், புளியந்தோப்பு ஆகிய 3 காவல் மாவட்டங்களில் கஞ்சா, குட்கா விற்பனை தொடர்பாக போலீசார் 34 வழக்குகள் பதிவு செய்து 5 பெண்கள் உட்பட 42 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சா, 42 கிலோ மாவா மற்றும் 687 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதெடார்பாக, தலைமை செயலக காலனியை சேர்நத் அனித் பாண்டே, போரூரை சேர்ந்த சிவராஜ், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த குணசேகரன், ராயபுரத்தை சேர்ந்த தீபக்குமார், வியாசர்பாடியை சேர்ந்த அனுசியா, கொடுங்கையூரை சேர்ந்த ஆனந்தன், பேசின்பிரிட்ஜை சேர்ந்த வேலழகி, அஞ்சலை மற்றும் புளியந்தோப்பை சேர்ந்த ரகுபதி (எ) கருப்பா, சுதாகர் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்திலும் கைது செய்துள்ளனர்.மேலும், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்காத எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, திரு.வி.க.நகர் இன்ஸ்பெக்டர் சண்முகம், எம்.கே.பி.நகர் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ மில்லர் ஆகிய 3 பேர் மீது போலீஸ் கமிஷனர் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: