கி.வீரமணிக்கு மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதற்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பெரியாரின் தனிச் சிறப்புமிக்க தத்துவத்தைப் பரப்பும்  அரிய பணியில் மனிதநேய சாதனையாளர் விருதுபெறும் திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணியை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.

Advertising
Advertising

1953ம் ஆண்டு முதல், உலகளாவிய அளவில் மனிதநேய சிந்தனையுடன் பொதுநலனில் ஈடுபட்டு வருவோருக்கு வழங்கப்பட்டு வரும் இந்த விருது முதன்முதலாக இந்தியர் ஒருவருக்கு, அதிலும் திராவிடர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது என்பதும், அந்த விருதினை நமது தாய்க் கழகத்தின் தலைவர் பெறுகிறார் என்பதும் மகிழ்ச்சியும் பெருமையும்  தருவதாகும். அவரது தொண்டறம் தொய்வின்றித் தொடர இந்த விருது  ஊக்கமளிக்கும்’’ என கூறியுள்ளார்.

Related Stories: