×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தமிழக அரசு காரணமல்ல': அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல. அதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை தான் பதிலளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதுதொடர்பாக கூறுகையில், ‘‘மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஆள்மாறாட்டம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தமிழக அரசு நீட் தேர்வை நடத்தவில்லை. அதை நடத்துவது தேசிய தேர்வுகள் முகமை. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை அல்லது மத்திய அரசு தான் பதிலளிக்க வேண்டும். தமிழக அரசு இதற்கு காரணம் அல்ல. ஆனால் ஆள்மாறாட்டம் உறுதி செய்யப்பட்டால் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.


Tags : government ,Tamil Nadu ,Minister Vijayabaskar , Wide choice, impersonation, Government of Tamil Nadu, Minister Vijayabaskar
× RELATED தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு...