பழங்குடியின மாணவர்களுடன் மெட்ரோ ரயிலில் கமல் பயணம்

சென்னை: ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மாநில பழங்குடியின மாணவர்கள் நேற்று சென்னைக்கு விமானத்தில் வந்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை அவர்கள் நேரில் சந்தித்தனர். பிறகு மெட்ரோ ரயிலில் செல்ல வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்து இருந்தனர். அதன்படி அந்த மாணவர்களுடன் கமல்ஹாசன் மெட்ரோ ரயிலில் பயணித்தார். அப்போது மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் நிருபர்களிடம் கமல் பேசும்போது, ‘பழங்குடியின மாணவர்கள் பல வருடமாக வௌியில் வராமல் இருந்தனர். இப்போதுதான் அவர்கள் வெளியே வர ஆரம்பித்துள்ளனர். இது நல்ல மாற்றம். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது பற்றி கேட்கிறீர்கள். ஓட்டு போடும் இடத்தில் ஆள்மாறட்டம் செய்வது போல், எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற தைரியம்தான் இதற்கு காரணம்’ என்றார்.


Tags : Kamal ,Aboriginal , Aboriginal Students, Metro Rail, Kamal
× RELATED ரயில் நிலையத்தில் - ஓடும் ரயிலில்...