விவசாயிகளுக்கு இழப்பீடு விவகாரம்: சப்-கலெக்டர் ஆபீசை ஜப்தி செய்ய முயற்சி

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா இளையநல்லூர் கிராமத்தில் உள்ள குப்பிரெட்டித்தாங்கல் கிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு துணை மின்நிலையத்திற்கென 60 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக ஒரு சென்ட்டுக்கு ₹1,250 இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆனால் இந்த தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி 2014ம் ஆண்டு ேவலூர் நில ஆர்ஜித நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடுத்தனர். அதில், ‘புதிய நில உரிமை சட்டத்தின்படி ஒரு சென்ட்டுக்கு ₹5 ஆயிரம் வழங்க வேண்டும்’ என கூறியிருந்தனர். இந்த வழக்கில், 1 சென்ட்டுக்கு ₹5 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்கவில்லை.

Advertising
Advertising

இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இழப்பீடு தராத சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாற்காலிகள், கணினிகள் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை கோர்ட் அமினாவுடன் வழக்குதாரர்கள் 15 பேர் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த நேர்முக உதவியாளர் சரவணனிடம் ஜப்தி ஆணை வழங்கினர். இதற்குள், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த 2 வாரங்களுக்குள் இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்தார். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: