குடிபோதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு 15,500 அபராதம்

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள வனச்சரக அலுவலகம் முன்பு உள்ள பர்கூர் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எண்ணமங்கலம் விராலிக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த பூவரசன் (18) என்பவர் அந்த வழியாக பைக்கில் வந்தார். போலீசார் அவரிடம் சோதனை நடத்தியதில் அவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை. ஹெல்மெட் அணியவில்லை. குடிபோதையில் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு 15,500 அபராதமாக விதிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: