அரசு அறிவித்த பால் கொள்முதல் விலை தரக்கோரி போராட்டம்

திருவண்ணாமலை: தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் விலை உயர்வு கடந்த மாதம் 19ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் விலையை குறைத்து வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், தங்கள் கிராமத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யும் பால் லிட்டருக்கு ₹32 வழங்கக்கோரி, திருவண்ணாமலையில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு துணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertising
Advertising

Related Stories: