×

கைதி இறந்த வழக்கில் புதுவை சிறை சூப்பிரண்டு ஜெயிலில் அடைப்பு

புதுச்சேரி: கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரை சேர்ந்த பிளம்பிங் தொழிலாளி ஜெயமூர்த்தி (22). இவரை கடந்த 21.11.2018-ம் தேதி பைக் திருட்டு வழக்கில் பாகூர் போலீசார் பிடித்து சென்றனர். காவலில் வைத்து சித்ரவதை செய்ததாக தெரிகிறது. பின்னர், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.  சிறையிலும் துன்புறுத்தியதால் ஜெயமூர்த்தி இறந்தார். இச்சம்பவத்தில் பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், ஏஎஸ்ஐ திருமால், காலாப்பட்டு மத்திய சிறை சூப்பிரெண்டு பாஸ்கரன், சிறை மருத்துவர் வெங்கடரமணநாயக் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இறந்தவர் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பி.சி.ஆர். காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே, பாஸ்கரன், டாக்டர் வெங்கடரமணநாயக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி சுபா அன்புமணி உத்தரவிட்டார். இதையடுத்து பாஸ்கரன், காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags : superintendent ,New Prison ,prisoner ,death ,jail , Prisoner, Puduvai Prison, Superintendent Jail
× RELATED வலங்கைமான் பகுதியில் மணல் ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்