டாஸ்மாக் இளநிலை உதவியாளர் தேர்வு எழுதிய 28 பேர் 2ம்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு

சென்னை: டாஸ்மாக்கில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த மாதம் 18ம் தேதி தேர்வு நடந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீது உள்ளஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் ஆய்வு செய்து ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளவர்களின் பட்டியலை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்தனர். கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் தேர்வில் தேர்ச்சி பெற்ற 500 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நடந்தது. இதில், 31 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளவில்லை. 5 பேரின் சான்றிதழ்கள் நிராகரிக்கப்பட்டன. மீதம் இருந்த 464 பேரின் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அடுத்தகட்டமாக 28 பேருக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 25ம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளதாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

Related Stories: