அண்ணா பல்கலை.க்கு இன்ஸ்டிட்யூட் ஆப் எமினென்ஸ் அந்தஸ்து விண்ணப்பித்தல் தொடர்பாக ஆலோசனை: உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்  கூறியதாவது: தமிழ்வழி இன்ஜினியரிங் மாணவர்  சேர்க்கை இடங்களில் மாணவர்கள் சேரவில்லை. அதனால் அந்த இடங்கள் பாதியாக  குறைக்கப்பட உள்ளது.  தமிழகத்தில் 5 கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இன்ஸ்டிட்யூட் ஆப் எமினென்ஸ்(சீர்மிகு கல்வி நிறுவனம்) அந்தஸ்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு (இன்ஸ்டியூட் ஆப் எமினன்ஸ்) அந்தஸ்து வழங்குவதற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு உயர்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்குவதற்கு தமிழக அரசு எப்போதும் தயாராகவே உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இஸ்டிட்யூட் ஆப் எமினென்ஸ் அந்தஸ்து கிடைத்தால், பல்கலைக்கழகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும் என்று மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை. இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

Related Stories: