முதுநிலை ஆசிரியர் போட்டித்தேர்வு 30 கண்காணிப்பாளர்கள் நியமனம்

சென்னை: அரசு மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு 30 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2340 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 பணியிடங்களில் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான கணினி வழி போட்டித் ேதர்வு 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை கண்காணிக்க மாவட்ட அளவில் 30 பேர் கண்காணிப்பாளர்களாக நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி கூட்டம் சென்னையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடக்கிறது.

இந்த கணினி வழித்தேர்வு நடப்பதற்கு முன்னதாக கண்காணிப்பாளர்கள் நேரடியாக அந்தந்த மையங்களுக்கு சென்று பார்வையிட வேண்டும். அந்த மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்றும் பார்க்க வேண்டும். கணினி வழி தேர்வுக்கான ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: