அரசு மருத்துவமனை வளாகத்தில் பையில் கிடந்த பெண் குழந்தை மீட்பு

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பார்வையாளர்கள்  காத்திருக்கும் கூடம் அருகே நேற்று அதிகாலை குழந்தை அழும் சத்தம்  கேட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது அங்கிருந்த சிமெண்ட் பெஞ்ச்  மீது வைக்கப்பட்டிருந்த கட்டை பையில் இருந்து சத்தம் கேட்டது. மருத்துவமனை  ஊழியர்கள் பையை திறந்து பார்த்த போது அதில் பிறந்து சில மணி நேரமே ஆன  பச்சிளங் பெண் குழந்தை இருந்தது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அந்த  குழந்தையை மீட்டு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை  அளித்து இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்தனர்.

Advertising
Advertising

அந்த குழந்தையை பெற்றவர் பெண் குழந்தை என விட்டு சென்றாரா? அல்லது  வேறு காரணமா? என நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  அந்த பெண் குழந்தையை கடலூர் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் தொட்டில்  குழந்தை திட்டத்தில் சேர்ப்பதற்காக ஊழியர்கள் கொண்டு சென்றனர். அரசு  மருத்துவமனை வளாகத்தில் பச்சிளங் பெண் குழந்தை அனாதையாக கிடந்த  சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: