×

கிணறு போன்று வீடு காணவில்லை: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு

கடலூர்: பிரதம மந்திரியின் நகர்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை காணவில்லை என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை  மாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிரதம மந்திரியின் நகர்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டுவதற்காக விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 20 மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த திங்கட்கிழமை  கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நீங்கள் புதிய வீடுகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்றும், இத்திட்டம் மூலம் புதிய வீடு வழங்குவதோடு, சுயமரியாதையும், சமூகத்தில்  முன்னேற்றத்தையும் கொடுக்க கூடிய வாழ்க்கையை கொடுத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கடிதம் பெற்ற குடும்பத்தினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் மனு அளித்தனர்.அதில் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடுகள் கட்டி  கொடுக்கப்பட்டுள்ளாகவும் அதற்கு ஆதாரமாக வாழ்த்துகள் தெரிவித்து கடிதம் வந்துள்ளதாகவும் ஆகையால் அவர்கள் கட்டி கொடுத்த வீட்டை காணவில்லை அதனை கண்டுபிடித்து தரும்படி மனுவில் குறிப்பிட்டிருந்தனர். பிரதம மந்திரியின் நகர்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படவில்லை, வங்கிகளில் இருந்து பணமும் பெறவில்லை ஆனால் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக வந்த கடிதம் குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் பரப்பரப்பாக  பேசப்படுகிறது.

Tags : collector ,office ,Cuddalore , Public missing complaint at Cuddalore collector's office
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா...