கொலை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உள்பட 7 பேரை விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு

பொன்னேரி: முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உள்பட 7 பேரை கொலை வழக்கில் இருந்து விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த செல்லதுரை 2005ம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில், கே.பி.பி.சாமி உள்பட 7 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று பொன்னேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. செல்லதுரை என்பவர் கடந்த 2005ம் ஆண்டு மாயமானார். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு. செல்லதுரை காணாமல் போன  வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

கே.பி.பி.சாமி அவரது சகோதரர்கள் கே.பி. சங்கர் மற்றும் சொக்கலிங்கம் உட்பட 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் ஆறு மாதத்திற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு பொன்னேரி நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து பொன்னேரி 4வது கூடுதல் மாவட்ட நீதிபதி இருசின் பூங்கொழலி தீர்ப்பு வழங்கினார். அதில் போலீஸ் தரப்பில் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லை என்று கூறி நீதிபதி, கே.பி.பி.சாமியும் அவரது சகோதரர் உட்பட 7 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

Related Stories: